பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்
படித்ததில் பிடித்தது , தெரிந்து கொண்டதை பகிர்கின்றேன்.!
பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. இந்தப் பழம் கரிகா பப்பாளி தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதன் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா என்றாலும், இந்தியா முழுவதும் இது பரவலாகக் கிடைக்கிறது.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் பப்பாளியில் 39 கலோரிகள், 5.90 கிராம் சர்க்கரை, 9.81 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் டயட்டரி நார்ச்சத்து, 0.14 கிராம் கொழுப்பு, 0.61 கிராம் புரோட்டீன், 328 மைக்ரோகிராம் வைட்டமின் A, 0.04 mg வைட்டமின், 0.05 mg வைட்டமின் B2, 0.338 mg வைட்டமின் B3, 0.1 mg வைட்டமின் B6, 38 mg வைட்டமின் B9, 61.8 mg வைட்டமின் C, 24 mg கால்சியம், 0.10 mg இரும்புச்சத்து, 10 mg மக்னீசியம், 5 mg பாஸ்பரஸ், 257 mg பொட்டாசியம், 3 mg சோடியம் நிறைந்துள்ளது. வைட்டமின் A உயிர் சத்து நிறைய இருக்கிறது. பப்பாளியில் வைட்டமின் ‘C’யும் ‘E’-யும் நிறைந்துள்ளன. ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் A-வாக மாற்றப்படுகிறது. விட்டமின் A அதிகமாக உள்ளது. இது 1094 IU கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் C யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்
பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை உண்ணுங்கள். அதில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் B, வைட்டமின் B-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. வைட்டமின் A குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் A, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.
பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்!
நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து……!
பப்பாளியின் நன்மைகள்:
ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த….!
இதயத்திற்கு நல்லது……!
இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்க……!
உடலிலுள்ள நச்சு முழுக்க சுத்திகரிக்க….!
உடலுக்குத் தென்பூட்ட……!
கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்……!
கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்…..!
குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேற….!
குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்ய….!
சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்க…..!
நரம்புத் தளர்ச்சி குறைய….!
பித்தத்தைப் போக்க……!
புற்றுநோயைக் குணப்படுத்த……!
மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது……!
மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்……!
முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்க….!
முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்……!
வயோதிகத்தைக் கட்டுப்படுத்த….!
பப்பாளியை ஒருவர் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதன் ஒட்டுமொத்த நன்மைகளையும் பெறலாம். பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.
அழற்சி : பப்பாளியில் புரோட்டீனை உடைத்தெறியும் நொதிகளான பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன் உள்ளது. இது சருமத்தில் உள்ள புரோட்டீன்களை உடைத்தெறிந்து, இறந்த செல்களை நீக்கி, சருமத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தடுக்கும்.
ஆர்த்ரிடிஸ் : பப்பாளியில் இருக்கும் முக்கிய நொதிகளான பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைக்கும். இதற்கு பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கரோட்டீன் போன்றவைகள் தான் காரணம். ஆகவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை அன்றாடம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதயம் : பப்பாளிக்கும், இதயத்திற்கும் ஒரு நல்ல தொடர்பு உள்ளது. பப்பாளி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதய நோய்களான மையோகார்டியல் இன்ப்ராக்ஷன், சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கும். இதில் உள்ள புரோ-கரோட்டினாய்டு பைட்டோ நியூட்ரியண்டுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது.
இரத்த அழுத்தம் : பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
எடை குறைவு : பப்பாளி உடல் எடையைக் குறைக்க உதவும். பப்பாளியில் கலோரிகள் குறைவு மற்றும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதோடு பப்பாளி நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
கண்கள் : பப்பாளி கண்களுக்கு நல்லது. பப்பாளியில் உள்ள பீட்டா-கரோட்டீன், கரோட்டினாய்டுகள், லுடீன் போன்ற பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் கண்கள் மற்றும் கண் தசைகளுக்கு நல்லது. ஒருவர் தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
குமட்டல் : பப்பாளி குமட்டல், காலைச் சோம்பல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் போன்ற சத்துக்கள் தான் முக்கிய காரணம்.
கொலஸ்ட்ரால் : பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். மேலும் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், இது கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுவிக்கவும் செய்யும்.
சளி : பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். ஆகவே ஒருவர் தினமும் வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக பப்பாளி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.
செரிமானம் : பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன், செரிமானம் சிறப்பாக நடக்க உதவி புரியும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், பப்பாளியை உட்கொண்டால், அதில் உள்ள நார்ச்சத்து நல்ல நிவாரணத்தை வழங்கும்.
புற்றுநோய் : பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும். அதோடு இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின்சி, ஈ, லைகோபைன், பீட்டா-கிரிப்டோஜாந்தின் மற்றும் பீட்டா-கரோட்டீன் புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கும்.
முதுமை தோற்றம்: பப்பாளி முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். இதற்கு இதில் உள்ள பல்வேறு முக்கிய பைட்டோ-நியூட்ரியண்டுகள் தான் காரணம். ஆகவே பப்பாளியை சாப்பிடலாம் அல்லது பப்பாளியின் தோலை சருமத்தில் 5 நிமிடம் தேய்த்தால், அதில் உள்ள அமிலம் சரும பொலிவை மேம்படுத்தும்.
வயிற்றுப்புழுக்கள்: பப்பாளி வயிற்றுப்புழுக்களை வெளியேற்ற உதவும். அதிலும் பப்பாளியின் விதையை உலர வைத்து அரைத்து பொடி செய்து, 2 டீஸ்பூன் பொடியுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் உட்கொண்டால், வயிற்றுப் புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்.
மருத்துவக் குணங்கள்:
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
Disclaimer: A compilation from various posts from Internet, Facebook, WhatsApp. Thanks for all those who contributed towards it. An interest to collect and bring to the notice of those interested is the idea of this post. I am not responsible for accuracy or inaccuracy of the information contained herein. None of the information contained herein is intended to offend anyone. Pictures are taken from various sources for spreading knowledge.
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only.
If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. It is always advised to consult a doctor or to do a patch test before using them to avoid allergic reactions.We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, tips from this site.
The content and the information in this website are for informational and educational purposes only, not as a medical manual. All readers are urged to consult with a physician before beginning or discontinuing use of any prescription drug or under taking any form of self-treatment. The information given here is designed to help you make informed decisions about your health. It is not intended as a substitute for any treatment that may have been prescribed by your doctor. If you are under treatment for any health problem, you should check with your doctor before trying any home remedies.
Like this:
Like Loading...