அசைந்தாடும் மயில் Asainthadum Mayil

அசைந்தாடும் மயில்
Asainthadum Mayil

ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம்
தாளம் : ஆதி
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்

அசைந்தாடும் மயில் ஒன்று காணும்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோணும் (அசைந்தாடும்)

அனுபல்லவி
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்)
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்

திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

மத்யமகாலம்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனனிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட
மயக்கும் விழியாட மலரணிகள் ஆட மலர் மகளும் பாட
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும்
மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)

சரணம்
அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்றதுவும் உண்டு
நிஜமான சுகம் என்று ஒன்று -இருந்தால்
நீடுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று
இசையாறும் கோபாலன் இன்று -நின்று
எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்)

Click the link to listen to “அசைந்தாடும் மயில் ஒன்று ” sung by Sudha Raghunathan ji

Click the link to listen to “அசைந்தாடும் மயில் ஒன்று ” sung by Nithyasree Mahadevan ji

Disclaimer: A compilation from various posts from Internet, Facebook, Whatsapp. Thanks for all those who contributed towards it. An interest to collect and bring to the notice of those interested is the idea of this post. I am not responsible for accuracy or inaccuracy of the information contained herein. None of the information contained herein is intended to offend anyone.