சித்தரத்தை – I Sitharathai – I

சித்தரத்தை – I
Sitharathai – I

Botanical Name : Alpinia Calcarata
English Name : Lesser Galangal
Tamil Name : சித்தரத்தை / Chitharathai , Sitharathai
Hindi Name : कुलंजन / Kulanjan
Malayalam Name : ചിറ്റരത്ത , കോലിഞ്ചി / Chittaratha, Kolinchi

மனிதரின் பல்வேறு வியாதிகளைப்போக்க, நல்ல மருந்தாகத் திகழ்கிறது, பொதுவாக, சிறந்த வலி நிவாரணியாக அறியப்படுகிறது, நாள்பட்ட இருமலுக்கு சிறந்த மருந்து, தொண்டைப்புண், இடுப்பு வலி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலிகள் மற்றும் அல்சர் எனும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மைமிக்கது. குழந்தைகளுக்கு ஏற்படும், மாந்தம், இளைப்பு மற்றும் சளித் தொல்லை களுக்கும் சித்தரத்தை, சிறந்த தீர்வாக அமையும். வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து.

நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும்.

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு இருக் கிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்கப்படும் பிரசவ லேகியத்தில் சித்தரத்தை சேர்க்கப்படு கிறது. சுவாச நோய்களுக்கான மருந்துகள், இருமல் மருந்துகள், வலி மற்றும் ஜீரண நோய்களுக்கான மருந்துகளில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது.

இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது. இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்ந்த பின்பு அடர்ந்த சிவப்பு நிறமாக மாறும். இது மருத்துவகுணம் நிறைந்தது. நறுமணம் கொண்டது. இது காரச் சுவை கொண்டது

சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும். செடியில் நறு மணம் வீசும். இதன் கிழங்குகளை சீவி, காய்கறிகளை கலந்து சூப்பாக தயார் செய்து பருகும் வழக்கம் கிழக்காசிய நாடுகளில் உள்ளது. சாலட்டாக தயார் செய்தும் சாப்பிடுகிறார்கள்.

சித்தரத்தை, சித்தரத்தை தூள், சித்தரத்தை கிழங்கு போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அரத்தைகளின் பொதுகுணம் :

பாடல் :

தொண்டையிற்கட் டுங்கபத்தைத் தூரத் துரத்திவிடும்
பண்டைச் சீதத்தைப் பறக்கடிக்கும் – கெண்டை விழி
மின்னே ! கரப்பனைவே றாக்கும் பசிகொடுக்கும்
சொன்னோம் அரத்தைச சுகம் — அகத்தியர் குணவாகடம்

மார்பை யடர் பிணிசு வாசகா சம்மூலம்
சோபை தட்டச் சூர்வாத சோனித நோய் – தீபச்
சுரத்தை யடுபடர்பல் தூருறு கண் நேரின்
அறத்தை எடுத்துகள தாம் — தேரையர் குணவாகடம்

அரத்தையின் குணத்தைக் கேளீர் அக்கரஞ் சன்னிபோக்கும்
உரத்ததொரு இருமல் மாற்றும் ஓங்கிய உதிரம் போக்கும்
இறைத்திடுங் காச மெட்டும் மிஞ்சிய சாயமுந்தீரும்
சுரத்தையும் நீக்கு மென்று சொன்னது வேதநூலே — ஏடு

வாதபித்தம் கரப்பான் வாதஞ்சி ரோரோகம்
சேர்ந்தகப முத்தோ டஞ் சீதமொடு – நேர்ந்த சுரம்
மற்றரத்தைக் காட்டி வரும் இருமலுந்தீரும்
சிற்றரத்தை யின் மருந்தால் தேர் — தேரையர் குணவாகடம்

நெஞ்சுக் கோழை, ஈளை, இருமல், சீதளம்,கரப்பான், மார்பு நோய், மூலம், வீக்கம், தந்த நோய், தந்த மூலப் பிணி, வாத சோணிதம், தீச்சுரத்தால் பிறந்த கபம்,ஆகியவைகளை போக்கு.பசியைத் தரும்.

சித்தரத்தையின் மருத்துவ குணங்கள் : இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அல்சரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

வாந்தி, பித்தம், கரப்பான், வாய், தலைநோய், கப தோட்டம், சீதளம், இருமல், சுரங்கள் தீரும்.

சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்.

Disclaimer: A compilation from various posts from Internet, Facebook, Whatsapp. Thanks for all those who contributed towards it. An interest to collect and bring to the notice of those interested is the idea of this post. I am not responsible for accuracy or inaccuracy of the information contained herein. None of the information contained herein is intended to offend anyone.

Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. It is always advised to consult a doctor or to do a patch test before using them to avoid allergic reactions.We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, tips from this site.

ஜலதோஷம் மூக்கடைப்பு சளி வறண்ட மற்றும் தொடர் இருமல் சீக்கிரம் குணமாக

mortar 1 320

ஜலதோஷம் மூக்கடைப்பு சளி வறண்ட மற்றும் தொடர் இருமல் சீக்கிரம் குணமாக

வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?

ஆப்பிள் சீடர் வினிகர் : ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 4 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடித்து வந்தால், சுவாசப் பாதையில் உள்ள தொற்றுக்ள் சரியாகும்.

ஆவி பிடிப்பது : யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

இஞ்சி : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. மேலும் இதன் காரச் சுவை, வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு துண்டு நற்பதமான இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் வருவது தடுக்கப்படுவதோடு, செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.

இஞ்சி : 1/2 ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் உடன், 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 வேளை சாப்பிட்டால், நெஞ்சு சளி வெளியேறுவதோடு, வறட்டு இருமலும் நீங்கும்.

இஞ்சி : இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.

இஞ்சி மற்றும் தேன் : சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.

உலர் திராட்சை : ஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.

எலுமிச்சை : எலுமிச்சையில் உள்ள மருத்துவ பண்புகள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, வைட்டமின் சி வறட்டு இருமலை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். அத்தகைய எலுமிச்சையின் சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் பலமுறை குடித்து வர, தொல்லைத் தரும் வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

எலுமிச்சை மற்றும் தேன் : இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும்.

ஏலக்காய் : ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்துக்கொள்ளவும். இதை, தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

ஏலக்காய் : உங்களுக்கு இரவில் வறட்டு இருமல் அதிகம் வருமாயின், இரவில் படுக்கும் முன் ஏலக்காயை வாயில் பேடுங்கள். இதனால் வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஓமம் : ஒரு டம்ளர் நீரை சூடேற்றி, அத்துடன் 1 ஸ்பூன் ஓமம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சிறிது தேன் கலந்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால், சீக்கிரம் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி : ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா? சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

கற்றாழை : கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் உடன் சிறிது தேன் கலந்து, குடிக்க வேண்டும்

கொள்ளுப்பயிறு : கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.

சித்தரத்தை : சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும்.

சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் : கொஞ்சம் சித்தரத்தை, தாளிசபத்திரி, அதுமதுரம் (ஒவ்வொன்றும் 30கிராம் அளவில்) எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன துண்டு சுக்கு, மல்லி, கருப்பட்டி(கருப்புக்கட்டி) அல்லது பனங்கற்கண்டு ஆகியன சேர்த்துக்கொள்ளுங்கள். 200 மி.லி. நீர் சேர்த்து, பாதியாகும் அளவு நன்றாகக் கொதிக்க விடுங்கள். ஆறிய பின்னர் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை குடியுங்கள்! வறட்டு இருமல் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடும். இரவிலும் இருமல் தொல்லை இல்லாமல் தூங்கலாம் கொஞ்சம் காய்ந்த திராட்சையை (உலர் திராட்சை) வாயில் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்த உமிழ்நீர் இறங்க, இறங்க, இருமல் வராது.

சீரகம், பனங்கற்கண்டு : பொடி செய்த பனங்கற்கண்டுடன் பத்து கிராம் பொடி செய்த சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இதை காலை, மாலை இருவேளை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

சூடான சூப் : சூடான சூப்பைக் குடித்தால், அது தொண்டையில் உள்ள அரிப்பைத் தடுப்பதோடு, வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதிலும் சிக்கன் சூப் குடிப்பது வறட்டு இருமலுல் மிகவும் நல்லது. அந்த சிக்கன் சூப்பில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

துளசி : துளிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் வறட்டு இருமலை சரிசெய்யும். அதற்கு துளசி இலைகளை சிறிது வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம்.

தூதுவளை : சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை கொடியை காய வைத்து பொடியாக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் தூதுவளை பொடியையும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் தூதுவளை பொடி மற்றும் தேனுடன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தூதுவளை : சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்.

தேன் : தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தேன் : தேனில் உள்ள உட்பொருட்கள், வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, 2 நிமிடம் சூடேற்றி, பின் உட்கொள்ள வேண்டும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

தேன் மற்றும் எழுமிச்சை சாறு : இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.

பாதாம் : 8-9 ஊற வைத்த பாதாமை, தோல் நீக்கி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து, நாள் ஒன்றுக்கு 2-3 முறை என உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

புதினா, மாதுளை : புதினாவில் இருக்கும் நற்குணங்கள் வறட்டு இருமலை குணப்படுத்தும். இதை நீங்கள் சமைக்கும் எந்த உணவில் வேண்டுமானலும் சேர்த்து உண்ணலாம். மாதுளை உதிர்த்து, அதனுடன் தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

மசாலா டீ : வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் பெற மசாலா டீ உதவும். அதிலும் இஞ்சி, பட்டை, கிராம்பு போன்ற மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும். அதற்கு ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள்.

மசாலா டீ : ஒரு டம்ளர் நீரில் சோம்பு அல்லது பட்டையைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குடிப்பதன் மூலம், வறட்டு இருமல் போய்விடும். வேண்டுமானால் சுடுநீரில் சிறிது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். முக்கியமாக சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள் : மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

மஞ்சள் பால் : மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவி, வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

மஞ்சள் பால் : காலங்காலமாக வறட்டு இருமலுக்கு மேற்கொள்ளப்படும் இயற்கை சிகிச்சை தான் இது. அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் வெதுவெதுப்பான பால் தொண்டையை அமைதியடையச் செய்து, எளிதில் தூங்க உதவும். மேலும் மஞ்சள் தூளில் உள்ள ஆன்டி-பயாடிக் தன்மை இருமலை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும்.

மஞ்சள்,பால், மிளகு : இது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.

மருதாணி இலை : ஒரு டம்ளர் நீரில் சிறிது மருதாணி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் 2 முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனாலும் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

மாதுளம் பழம் : வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்தசம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மிளகு : மிளகில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், வறட்டு இருமலில் இருந்து விடுபட உதவும். 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

முருங்கைகாய் : முருங்கைகாயை நசுக்கி, அதனுடைய சாற்றினை எடுத்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை குணமாகும்.

வெங்காயம் : வறட்டு இருமலுக்கு வெங்காயம் ஒரு நல்ல நிவாரணத்தை வழங்கும். இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது நோய்த்தொற்றுக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொல்லைமிக்க வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.

வெங்காயம் : வெங்காயத்தில் உள்ள சல்பருக்கு நாள்பட்ட இருமலைப் போக்கும் சக்தி உண்டு. அதற்கு 1 டீஸ்பூன் வெங்காய சாற்றுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் இந்த கலவையை தினமும் மூன்று வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

Disclaimer: A compilation from various posts from Internet, Facebook, WhatsApp. Thanks for all those who contributed towards it. An interest to collect and bring to the notice of those interested is the idea of this post. I am not responsible for accuracy or inaccuracy of the information contained herein. None of the information contained herein is intended to offend anyone. Pictures are taken from various sources for spreading knowledge. Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only.

The content and the information in this website are for informational and educational purposes only, not as a medical manual. All readers are urged to consult with a physician before beginning or discontinuing use of any prescription drug or under taking any form of self-treatment. The information given here is designed to help you make informed decisions about your health. It is not intended as a substitute for any treatment that may have been prescribed by your doctor. If you are under treatment for any health problem, you should check with your doctor before trying any home remedies. If you are taking any medication, do not take any vitamin, mineral, herb, or other supplement without consulting with your doctor. If you suspect that you have a medical problem, we urge you to seek competent medical help.